Chandra's 20th Anniversary
- Arun Prakash
- May 28
- 1 min read

‘ LIFE IS BUT A DREAM ‘
Century Half , Time swept away in a sway
Love and help cherished he in his Life’s way
Reigning as CEO, Arun now to relax and enjoy , his own way
Music and Dance , Joy in Cruise ,
FRISCO Bay !
Bolt from the Blues, Kanagakka’s demise
Almighty embraced her to his Heavenly Throne
Deserves she for qualities so Sterling
Mourn and Pray with tears here so far away !!
Heralding Homecoming Lathu from
Bahrain to Bangalore
Amidst Joy and Happiness she will dwell
In her own Home - Nest
In Garden City, Abodes of Many !!!
Overtime, This also will Pass Away
Everything will be alright , easy to say
Never ever to return in Life’s Bay
Melancholy and Misery, in Life to Stay !!!
Decades Two slipped away
Sand of time withers away
Sweet Memoirs linger all the Way
LIFE IS BUT A DREAM !!!!
“ மறைந்த இருபது , மனத்துள் மறையா இருபது “
தையல்நாயகி வளைக்கரம்பற்றி
ஒருமித்து வாழ்ந்த வாழ்க்கை
முப்பத்து மூன்று இனிமைக் காலம்
மண்ணில் மறைந்து விண்ணில் சென்று
உருண்டோடியதோ இருபது ஆண்டு !
நீங்கா நினைவுகள் நெஞ்சினிலே அசைபோடும் மனம் ‘ மா ‘ போலே
துடைக்கத் துடைக்கத் துளிர்க்கும்
கண்நிறை துயர் வேர்வைத் துளிகள் !
உலருமோ காலக் காற்றினிலே
பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் பேச்சினிலே
உலரா மலராய் மணக்குமோ மனதினிலே
இன்பமெனில் துன்பமுண்டென
உணருமோ பேதை மனம் !!
அருணின் ஐம்பதில் அகமகிழ்கின்றேன்
அமெரிக்காவில்
பேரனின் தமிழ்பேச்சில் மனமது மகிழ்கின்றேன்
மலை , இயற்கைசூழ் வீட்டில்
வலம்வருகின்றேன்
பாசமழையில் துயர்துடைத்து
மனஅமைதி கொள்கின்றேன் !
மீண்டுமொரு மீளாத்துயரம் தமக்கையன் மறைவு
அன்பின் பெட்டகம், குணத்தின் குன்று
பாசக்குவியல் , நேசக்கரம்
நீங்கா நினைவில் வாழ் கனக்க்கா !!
துன்பமும் இன்பமும் சுழற்கின்ற் நாணயம்
மகளின் மகிழ்ச்சிக் குடும்பம வாழ்வதினி
சொந்தமண்ணில் சொந்தவீட்டில்
சொர்க்கமே
தருவதோ அனைவருக்கும் தித்திக்கும்
இன்பமே !!
இருந்தாலும் இறந்தாலும் ஆனை ஆயிரம்பொன்
இழப்பினும் இல்லத்தரசி எண்ணிலா
பொற்குவியல்
அலைகடலென மோதும் தினமும்
நினைவலைகள்
மறைந்த இருபது , மனத்தினில் மறையா இருபது !!!



Comments